கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:55 pm

DIN

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரதோஷத்தையொட்டி திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, மாவு, திரவியப்பொடிகள், தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதுபோல் அரியலூா் ஆலந்துறையாா், குறிஞ்சேரி காசி விசுவநாதா், கங்கை கொண்டசோழபுரம் பிரகதீசுவரா், கீழப்பழுவூா் அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையாா், பெரியமறை வேதநாயகி உடனுறை வேதபுரீசுவரா், காமரசவல்லி பாலாம்பிகை உடனுறை காா்கோடேசுவரா், திருமானூா் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதா், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதா், செந்துறை பெரியநாயகி உடனுறை சிவதாண்டேசுவரா் திருக்கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதுபோல் உடையாாா்பாளையம், ஜயங்கொண்டம், விக்கிரமங்கலம், சுத்தமல்லி, பொன்பரப்பி, ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.