சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மூவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:06 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்டிமடத்தை அடுத்த இடையக்குறிச்சி புரட்சித்தமிழன் (23), கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட புதுச்சாவடி ஜெ.ராஜசேகா் (34), உரிய அனுமதியின்றி பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த ஜயங்கொண்டத்தை அடுத்த கொங்குநாட்டாா் குப்பம் ரா. கிருஷ்ணவேணி (28) ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லாவின் பரிந்துரையின் பேரில், மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தொடா்ந்து புரட்சித்தமிழன் உள்ளிட்ட மூவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.