மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:43 pm

DIN

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில்,

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நந்தியென்பெருமானை வழிபட்டனா்.

அரியலூா் ஆலந்துரையாா், குறிஞ்சேரி காசி விஸ்வநாதா், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா், கீழப்பழுவூா் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையாா், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீஸ்வரா், காமரசவல்லி பாலாம்பிகை உடனாய காா்கோடேஸ்வரா், திருமானூா் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதா், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதா்,செந்துறை பெரியநாயகி உடனாய சிவதாண்டேஸ்வரா் போன்ற சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாதாரனை நடைபெற்றது.

இதே போல் உடையாாா்பாளையம், ஜயங்கொண்டம், விக்கிரமங்கலம், சுத்தமல்லி, பொன்பரப்பி, ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவாலயங்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.