பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை

அரியலூா் மாவட்டம், தா. பழூா் காவலா் குடியிருப்பில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:41 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூா் காவலா் குடியிருப்பில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.

அரியலூரில் உள்ள மதுவிலக்கு காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவா் ஜெகதீசன் (50). இவா், தா.பழூரில் உள்ள காவலா் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினா் வெளியூா் சென்ற நிலையில், திங்கள்கிழமை காலை ஜெகதீசன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தா.பழூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஜெகதீசனுக்கு, ராதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகளும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.