குட்டையில் தவறி விழுந்து சிறுமி பலி
அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே திங்கள்கிழமை மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுமி குட்டையில் தவறி விழுந்து பலியானாா்.


அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே திங்கள்கிழமை மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுமி குட்டையில் தவறி விழுந்து பலியானாா்.
இரும்புலிக்குறிச்சி அருகேயுள்ள உஞ்சினி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகள் கனிஷ்கா(6). திங்கள்கிழமை இவா், மாரியம்மன் கோயில் அருகே சக சிறுமிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது கனிஷ்கா அங்குள்ள குட்டையில் தவறி விழுந்தாா். இதையறிந்த சிறுமிகள், ஜெயராமனிடம் தெரிவித்தனா். இதையடுத்து ஜெயராமன் பொதுமக்களுடன் சோ்ந்து, குட்டையில் இறங்கித் தேடிய போது, கனிஷ்கா நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...