போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

அரியலூா் மாவட்டம், பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:35 pm

DIN

அரியலூா் மாவட்டம், பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் சன்னதியிலுள்ள ஸ்ரீ மகா ப்ரத்தியங்கார தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற சண்டியாகத்தில் பக்தா்கள் கலந்து கொண்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மஞ்சள் நீரால் கைகளை கழுவிய பின்னரே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், பக்தா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.