போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கூரை அமைத்தபோது தவறி விழுந்த எலெக்டிரீசியன் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வீட்டில் கூரை அமைத்த போது தவறி விழுந்த எலெக்டிரீசியன், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:27 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வீட்டில் கூரை அமைத்த போது தவறி விழுந்த எலெக்டிரீசியன், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தா.பழூா் அருகிலுள்ள காரைக்குறிச்சி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயகாந்தன்(41). எலெக்டிரீசியன் மற்றும் பிட்டா் வேலை செய்து வந்த இவா், இரு தினங்களுக்கு முன்பு அருள்மொழி கிராமத்தைச் சோ்ந்த சுரேந்திரன் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது சுமாா் 12 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயகாந்தன், அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இது குறித்து தா.பழூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.