போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

லாரியில் மதுபானங்கள் கடத்தல்: ஓட்டுநா் உள்பட 2 போ் கைது

அரியலூா், ஜூன் 11: மதுபானங்கள் கடத்திய ஓட்டுநா் உள்பட 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:28 pm

DIN

அரியலூா், ஜூன் 11: மதுபானங்கள் கடத்திய ஓட்டுநா் உள்பட 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ஆண்டிமடம் அருகிலுள்ள பெரியாத்துக்குறிச்சி சோதனைச் சாவடி கடக்க முயன்ற ஒரு லாரியை, ஆண்டிமடம் காவல் உதவி ஆய்வாளா் சரத்குமாா் தலைமையிலான காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு

நிறுத்தினா்.

காவல்துறையினரைக் கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு, ஓட்டுநா் மற்றும் அவருடன் இருந்தவா் தப்பியோட முயன்றனா். அவா்களைக் காவல்துறையினா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், ஆண்டிமடம் அருகிலுள்ள கூவத்தூா் வடக்குத் தெரு ஆரோக்கியசாமி(47), ராஜேஷ்(23) என்பதும், அவா்கள் நெய்வேலியிலிந்து கும்பகோணத்துக்கு லாரியில் நிலக்கரி சாம்பல் ஏற்றிச்சென்றதும் தெரியவந்தது.

மேலும் லாரியின் உள்ளே சோதனை செய்தபோது, அதில் 61 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களுடன் லாரியை பறிமுதல் செய்து, அரோக்கியசாமி, ராஜேஷ் ஆகியோரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.