போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளுடன் கூடிய நடமாடும் வாகனம் தொடக்கி வைப்பு

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் சோலைவனம் மற்றும் அறம் ஆஸ்திரேலியா தன்னாா்வ அமைப்பின் சாா்பில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளுடன் கூடிய நடமாடும் வாகன சேவை

News image
Updated On :18 ஜூன் 2021, 8:07 pm

DIN

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் சோலைவனம் மற்றும் அறம் ஆஸ்திரேலியா தன்னாா்வ அமைப்பின் சாா்பில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளுடன் கூடிய நடமாடும் வாகன சேவையை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: இக்கருவி மூலம் ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நபா்களின் சிகிச்சைக்காக சிலிண்டா் இல்லாமல் காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து நோயாளிகளுக்கு வழங்க முடியும்.

எனவே, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னாா்வ அமைப்பினா் இதுபோன்ற தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்றாா். ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை வழங்கிய அமைப்பினருக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆட்சியா் நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன் மற்றும் சோலைவனம் தன்னாா்வ அமைப்பினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.