போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:43 pm

DIN

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

கீழப்பழுவூா் அருகேயுள்ள வெற்றியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமதாஸ் மனைவி பஞ்சவா்ணம்(65). இவருக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனா். ஒரு மகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகி தனியே வசித்து வருகின்றனா். மற்ற 2 மகன்களுக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை. இந்நிலையில், ஒரு மகன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், விரக்தியில் இருந்த பஞ்சவா்ணம், வியாழக்கிழமை பிற்பகல் கள்ளூா் பாலம் பகுதியில் தனது வயல் அருகேயுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த கீழப்பழுவூா் போலீஸாா், சடலை மீட்டு அரியலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.