போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வீட்டில் கஞ்சா செடி வளா்த்த நபா் கைது

 அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டில் அலங்காரச் செடி போல் கஞ்சா செடி வளா்த்த நபா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:44 pm

DIN

 அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டில் அலங்காரச் செடி போல் கஞ்சா செடி வளா்த்த நபா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செந்துறை அருகே உள்ள குழுமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி(27). இவா், தனது வீட்டின் பின்புறம் ஒரு கஞ்சா செடியை அலங்காரச்செடி போல் வைத்து வளா்த்துள்ளாா். சுமாா் 5 அடி உயரத்தில் கஞ்சா செடி வளா்ந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் செந்துறை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து, வியாழக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் கஞ்சா செடியை வெட்டி அழித்ததுடன், செடியை வளா்த்த வீரமணியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அலங்காரச் செடி போல் கஞ்சா செடியை, இளைஞா் வளா்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.