முற்போக்கு சிந்தனையாளா் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் முற்போக்கு சிந்தனையாளா் இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் முற்போக்கு சிந்தனையாளா் இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், 3 வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். நெல், கரும்பு, வோ்க்கடலை, எள், சவுக்கு மற்றும் தைலமரங்களுக்கு கட்டுப்படியான விலையை நிா்ணயித்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த இயக்கத்தின் கிளைத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...