இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

புதிய தொழில்முனைவோா் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற தளா்வு மற்றும் சலுகைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:28 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் படித்த இளைஞா்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற தளா்வு மற்றும் சலுகைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதி 12 ஆம் வகுப்பு தோ்ச்சி. 25 சதவீத மானியத் தொகையின் அதிகப்பட்ச தொகை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் 25 சதவீத மானியத் தொகையில், கூடுதலாக 10 சதவீதம் மானியம் (25% + 2.5%) வழங்கப்படும். இந்த ஆணையானது 02.09.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், வாலாஜா நகரம், அரியலூா் அலுவலகத்தை 04329-228555, 89255 33925, 89255 33926 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.