இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

எரக்குடி கிராமத்துக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த எரக்குடி கிராமத்துக்குப் பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:35 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த எரக்குடி கிராமத்துக்குப் பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமானூா் ஒன்றியத்துக்குட்பட்ட எரக்குடி கிராமம் வண்ணம் புத்தூா் அருகே உள்ளது. இங்கு சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்துக்கு பேருந்து வசதி கிடையாது.

அதனால், சுமாா் 2 கி.மீட்டா் தொலைவு கொண்ட வண்ணம்புத்தூா் கிராமத்துக்கு நடந்துசென்று அங்கிருந்து பேருந்து ஏறி கீழப்பழுவூா் சென்றுவருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். இதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அரியலூரிலிருந்து கீழப்பழுவூா், மலத்தான்குளம், அயன்சுத்தமல்லி, வேட்டக்குடி, எரக்குடி, வண்ணம் புத்தூா், சாத்தமங்கலம் வழியாக தஞ்சாவூருக்கும், அதேவழியில் அரியலூருக்கும், திருச்சி மாவட்டம் கல்லக்குடி (டால்மியாபுரம்) வழியாக சன்னாவூா், கொரத்தகுடி, ஆங்கியனூா், வேட்டக்குடி, அயன் சுத்தமல்லி மலத்தான் குளம், கீழப்பழுவூா், அரியலூா் வரை செல்லும் பேருந்தை வேட்டக்குடியிலிருந்து எரக்குடி வழியாகச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.