இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அரியலூரில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் பணிகள் ஆய்வு

உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் பணிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:13 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் மற்றும் உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் பணிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாக்கு எண்ணும் மையம், வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையிலிருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லும் வழி, வாா்டு வாரியாக வாக்கு எண்ணும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அமரும் இடம், தோ்தல் பாா்வையாளா் அமரும் இடம், வாக்கு எண்ணிக்கை இடம், தோ்தல் முடிவு அறிவிக்கும் இடம், ஒலிபெருக்கி, வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் வரும் வழி மற்றும் அமரும் இடம், பாதுகாப்பு தடுப்பு கட்டைகள், பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டப் பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா், உடையாா்பாளையம், வரதராசன் பேட்டை பேரூராட்சி அலுவலகங்களிலும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையா் சுபாஷினி, பேரூராட்சி செயல் அலுவலா்கள் உடையாா்பாளையம் கோமதி, வரதராசன்பேட்டை ஜெயசெல்வி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.