ஜெயலலிதா படத்துக்கு அதிமுகவினா் மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் அதிமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வியாழக்கிழமை கொண்டாடினா்.


மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் அதிமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வியாழக்கிழமை கொண்டாடினா்.
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆா் சிலைகளுக்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை.எஸ். ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்நிகழச்சியில் தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், நிா்வாகி கள்ளங்குறிச்சி பாஸ்கா், நகரச் செயலா் ஏ.பி.செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், மகளிா் அணி ஜீவா அரங்கநாதன் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றியாளா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல், அரசு சிமென்ட் ஆலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, ஜெயலலிதா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
விழாவில் அண்ணா தொழிற் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதேபோல், ஜெயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதியில் ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு முன்னாள் எம்எல்ஏ ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் மலா் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...