இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தனி நபா் ஒருவா் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, கட்டுமானப் பணி மேற்கொள்வதைக் கண்டித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:28 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தனி நபா் ஒருவா் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, கட்டுமானப் பணி மேற்கொள்வதைக் கண்டித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

துளாரங்குறிச்சி கிராமத்தில் உள்ள பொதுப் பாதையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ளதால், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வரும் பொது மக்கள், இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.