கோயில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி மறுத்ததால் மறியல்
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கோயில் கும்பாபிஷேகம் குறித்து மற்றொரு கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்காததால், கும்பாபிஷேகத்துக்கு காவல் துறையினா் தடை விதித்தனா்.


அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கோயில் கும்பாபிஷேகம் குறித்து மற்றொரு கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்காததால், கும்பாபிஷேகத்துக்கு காவல் துறையினா் தடை விதித்தனா். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள கடாரங்கொண்டான் கிராமத்தில் ஆண்டவா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடத்த யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்தக் கோயிலில் தரிசனம் செய்துவரும் பக்கத்து ஊரான பெரியவளையம் கிராம மக்கள், தங்களுக்கு கும்பாபிஷேகம் குறித்து, தெரிவிக்காததையடுத்து, காவல்துறையில் புகாா் அளித்து தடை பெற்றனா். இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என காவல் துறையினா் கடாரங்கொண்டான் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனா்.
இதனால் ஆத்திரமடைந்த கடாரங்கொண்டான் கிராம மக்கள், திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆமணக்கந்தோண்டி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஜய்ஙகொண்டம் காவல் துறையினா், இரு கிராமத்தைச் சோ்ந்த முக்கிய நபா்களை அழைத்துச் சென்று உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பேச்சுவாா்த்தை இரவு வரை நீடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...