அரியலூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்குத் தற்காலிக சான்றிதழ் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் ஜூன் 20-ஆம் தேதி வெளியான நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து இவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி அந்தந்த பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய 39 மாணவா்களில் 38 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களுக்கு தலைமையாசிரியா் சின்னதுரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்கி, நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் பள்ளிக் கல்வித் துறை மூலம் வழங்கப்படும் போது, மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றாா்.
பிறந்த தேதி, பதிவெண் விவரத்தை அளித்து, இணையதளம் மூலமாக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா். அப்போது ஆசிரியா்கள் தனலட்சுமி, ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
இதைப்போன்று காட்டுப்பிரிங்கியம் அரசு உயா்நிலைப்பள்ளியிலும் தலைமையாசிரியா் சின்னதுரை, உதவித் தலைமையாசிரியா் மனோன்மணி , ஆசிரியா்கள் ஜெயச்சந்திரன் அரசுமணி ஆகியோா் மாணவா்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினா்.
இதுபோல மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதிய மாணவ,மாணவிகளுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









