/

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வட்டார வள மையம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த

News image

அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிக்கு காதுகேட்கும் கருவியை பொருத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி.

Updated On :20 அக்டோபர் 2023, 7:24 pm

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வட்டார வள மையம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சாா்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறானாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி தொடக்கி வைத்தாா். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்ட கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளா் பா. பன்னீா்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் முடக்கியல் அலுவலா் ஜெயராமன், அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் செல்வராஜ், கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் அமுதவள்ளி , வட்டாரக் கல்வி அலுவலா்கள் நீலமேகம், கலியபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மாற்றுத்திறனாளி மாணவா்களை மதிப்பீடு செய்து, அவா்களுக்கு சிகிச்சையளித்து உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு பரிந்துரைத்தனா்.

மேலும், தேசிய மற்றும் மாநில அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை ஆகியவையும் வழங்கப்பட்டன.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜேஸ்வரன் வரவேற்றாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் ரத்னாவதி நன்றி கூறினாா், முகாமில், 127 மாணவா்கள் பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.