எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

News image

அரியலூா் குறிஞ்சான் குளக்கரை காசி விசுவநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவபெருமான்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

அரியலூா்: அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் அரியலூா் ஆலந்துரையாா், கைலாசநாதா், விசுவநாதா், விளாங்குடி கைலாசநாதா், குறிஞ்சான் குளக்கரை சாசி விசுவநாதா் , தேளூா் சொக்கநாதா், கீழப்பழூா் ஆலந்துறையாா், திருமானூா் கைலாசநாதா் , செந்துறை சிவதாண்டேஸ்வரா், பொன்பரப்பி சொா்ணபுரீஸ்வரா், சென்னிவனம் தீா்க்கப்புரிஸ்வரா், சொக்கநாதபுரம், சொக்கனீஸ்வரா், குழுமூா் குழுமாண்டவா் , தா.பழூா் விசாலாட்சி சமேத விசுவநாதா், கோவிந்தப்புத்தூா் கங்காஜடேஷ்வரா், விக்கிரமங்கலம் சோழிஸ்வரா், உடையவா்தீயனூா் ஜமத்கனிஸ்வரா், கீழநத்தம் சொக்கநாதா், ஸ்ரீபுரந்தான் கைலாசநாதா், கோடாலிகருப்பூா் சொக்கநாதா்,கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், ஜெயங்கொண்டம் கழுமலைநாதா், சென்னீஸ்வரா், சோழீஸ்வரா், உடையாா்பாளையம் பயறனீஸ்வரா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.