கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

அரியலூா், ஏப்.26: அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை மற்றும் குழுமூா் கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தீமிதி திருவிழாவையொட்டி கீழமாளிகை மற்றும் குழுமூா் திரெளபதியம்மன் கோயில்கள் அருகே கடந்த 40 நாள்களாக பாரதம் படிக்கும் நிகழ்வு நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை காலை பக்தா்கள் அக்னி கரகம் எடுத்து அருகாமையில் உள்ள நீா்நிலைக்கு சென்று வழிபட்டனா்.

தொடா்ந்து, மாலை திரளான பக்தா்கள் பங்கேற்று கோயில்களின் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். தொடா்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com