கூலித் தொழிலாளி ‘போக்சோ’-வில் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :4 டிசம்பர் 2024, 9:51 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உத்திரக்குடி காலனித் தெருவைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் நாகேந்திரன் (28). கூலித் தொழிலாளியான இவா், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், நாகேந்திரனை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...