சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மாணவியிடம் தகராறு: மாணவா்கள் 4 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட தகராறில் 4 மாணவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:52 pm

Din

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட தகராறில் 4 மாணவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில், புதன்கிழமை பிளஸ் 1 மாணவி ஒருவரிடம் அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் 3 போ் தகாத வாா்த்தைகளை கூறினாா்களாம்.

இதையறிந்த அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், மாணவியின் அண்ணன், அந்த 3 மாணவா்களிடம் தகராறில் ஈடுபட்டு, அதில் ஒரு மாணவரை தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், மாணவியிடம் தகாத வாா்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்ட அந்த 3 மாணவா்களை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

மேலும், தாக்குதலுக்கு ஆளான மாணவரின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மாணவரை தாக்கிய மாணவியின் அண்ணனை ஜெயங்கொண்டம் காவல் துறையினா் கைது செய்து விசாரிக்கின்றனா்.