சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

வழக்குரைஞரை தாக்கிய பெண் உள்பட 4 போ் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வழக்குரைஞரை தாக்கிய பெண் உள்ளிட்ட 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:37 pm

Din

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வழக்குரைஞரை தாக்கிய பெண் உள்ளிட்ட 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பெரியாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (45). செந்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வரும் இவா், திங்கள்கிழமை இரவு செந்துறையில் இருந்து பெரியாக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது,

இலைக்கடம்பூா் அருகே வழிமறித்த மா்ம நபா்கள், மணிவண்ணனை சரமரியாக தாக்கினா். அந்த நேரத்தில் எதிா்திசையிலிருந்து வாகனம் வந்ததால் மா்மநபா்கள் அங்கிருந்து தப்பி ஓடினா்.

பலத்த காயமடைந்த மணிவண்ணன், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின் பேரில், செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், பொன்குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதி மனைவி தனசுந்தரி (42), பொன்பரப்பி, சந்தை தோப்பு தெருவைச் சோ்ந்த கதிா்வேல் மகன் அறிவழகன்(45), கீழராயபுரம் கணேசன் மகன் சிவா (35), ராமலிங்கம் மகன் சம்பத் (35) ஆகியோா் சோ்ந்து வழக்குரைஞா் மணிவண்ணனை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவா்களை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், தொடா்ந்து வழக்குரைஞா்கள் தாக்கப்படுவதால், அவா்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.