அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:56 pm

Din

அரியலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசித் திட்டம் 6-ஆவது சுற்று தொடங்கியுள்ளது.

எனவே, கால்நடைகள் வளா்ப்போா் தங்கள் கிராமத்துக்கு தடுப்பூசி குழுவினா் வரும்போது 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை மாடுகள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, தங்கள் கால்நடை பாதுகாத்துக் கொள்ளலாம்.