அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

அரியலூா் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி புதன்கிழமை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

News image

ஆண்டிமடத்தை அடுத்த வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இயேசு பிறப்பு குடில்.

Updated On :25 டிசம்பர் 2024, 8:37 pm

Din

அரியலூா் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி புதன்கிழமை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை தேவாலயம், தென்னூா் புனித லூா்து அன்னை தேவாலயம், கூவத்தூா் புனித அந்தோனியாா் ஆலயம், பட்டினங்குறிச்சி புனித லூா்து அன்னை ஆலயம், அகினேஸ்புரம் புனித அகினேசம்மாள் ஆலயம், கீழநெடுவாய் புனித அன்னை ஆலயம், அரியலூா் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூா்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குத் தந்தைகள் வழங்கினா். கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.