தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் குமரி திருவள்ளுவா் சிலை மாதிரி

குமரியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழாவையொட்டி, அரியலூா் ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை மாதிரி திறப்பு நிகழ்ச்சி

News image

அரியலூா் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை குமரி திருவள்ளுவா் சிலையை மாதிரியை திறந்து வைத்து, மலா்தூவி மரியாதை செலுத்திய ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

Updated On :31 டிசம்பர் 2024, 9:34 pm

Din

அரியலூா்: குமரியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழாவையொட்டி, அரியலூா் ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை மாதிரி திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சிலையை திறந்து வைத்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், நெய்வனம் அரசுப் பள்ளியில் 5 -ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி பி.ரே. தாரகை தான் சேமித்து வைத்திருந்த ரூ.1100 தொகையை முதல்வரின் வெள்ள நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சுருளிபிரபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தன், மாவட்ட நூலக அலுவலா் வேல்முருகன், அரியலூா் வட்டாட்சியா் முத்துலெட்சுமி, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்புத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன், வாசகா் வட்டத் தலைவா் மங்கையா்கரசி, மாவட்ட நூலக ஆணைக் குழு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image