அரியலூா் மாவட்டத்தில் ரூ. 8.20 கோடியில் புதிய கட்டடங்கள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், கிராம செயலகக் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பொது விநியோக கடை கட்டடங்கள் மற்றும் உணவு தானிய கிடங்கு கட்டடங்கள் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து அரியலூா் மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா, மேற்கண்ட கட்டடங்களில் குத்துவிளக்கேற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கங்காதாரணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி, வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) சுவாமி முத்தழகன், வட்டாட்சியா் ஆனந்தவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் அருளப்பன், இடையத்தாங்குடி ஊராட்சித் தலைவா் சுமதி உள்ளிடடோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரியலூரில் நாளை ஆா்ப்பாட்டம் மத்திய தொழிற்சங்கத்தினா் முடிவு

அரியலூரில் கோடை கால பழங்கள் விற்பனை தீவிரம்

அரியலூரில் வாக்கு எண்ணும் பணி அலுவலா்களுக்கு பயிற்சி

புதுகையில் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



