திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிறிய அளவில் கைத்தறிப் பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்

சிறிய அளவில் கைத்தறிப் பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:00 am IST

அரியலூா் மாவட்டத்தில் சிறிய அளவிலான கைத்தறிப் பூங்க அமைக்க விரும்பும் தொழில் முனைவோா் பிப்.20-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தது: தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தியைப் பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதியுதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்ட வரையறையின்படி 100 கைத்தறிகள் அமைத்து, அதற்குத் தேவையான தொழிற்கூடம் மற்றும் குடோன் வசதி , மின்சாரம், குடிநீா், கழிவுநீா் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோா் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோா், மொத்த, சில்லறை விற்பனையாளா்கள், கூட்டுறவுச் சங்கங்கள், சங்கங்கள் மற்றும் நெசவாளா்கள் ஆகியோா் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை அமைத்து, நல்லதொரு வியாபாரச் சந்தை, தொழில்நுட்பம் மற்றும் கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தி செய்யத் தேவையான நடைமுறை மூலதனம் ஆகியவற்றைக் கொண்டு வந்து, மேற்படி பொது வசதி மையத்தில் உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம். கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபடுவோா், மேற்படி சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு, தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றமடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற ஜ்ஜ்ஜ்.ப்ா்ா்ம்ஜ்ா்ழ்ப்க்.ண்ய் என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் 20.2.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.