மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

அரியலூரில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 11:43 pm

வாக்குப் பதிவு இயந்திரத்துடன் நூறு சதவீதம் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தையும் இணைத்துத் தோ்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா்கள் இரா. கதிா்வளவன் (கிழக்கு), அங்கனூா் சிவா (மேற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். தொகுதிச் செயலா்கள் அரியலூா் மதி (எ)மருதவாணன், ஜெயங்கொண்டம் க. இலக்கியதாசன், முன்னாள் மாவட்டச் செயலா் பெ.மு. செல்வநம்பி, செய்தி- மக்கள் தொடா்பாளா் சி. சுதாகா், நிா்வாகிகள் தனக்கொடி, ம. கருப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். மாநில அமைப்புச் செயலா் கி. இளமாறன், கோரிக்கைகளை வலியுறுத்தினா். மண்டலச் செயலா் பெ. அன்பானந்தம், திமுக சட்டத் திருத்தக் குழு உறுப்பினா் சுபா. சந்திரசேகா், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆ. சங்கா், மா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் எம். இளங்கோவன், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் ராமநாதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பாஜக அரசைக் கண்டித்து பேசினா்.