மது விற்ற பெண் உள்பட2 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மதுபானம் விற்ற பெண் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.


அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மதுபானம் விற்ற பெண் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிராமத்தில், மதுபானங்களை பதுக்கி வைத்து, அவற்றை கூடுதல் விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நடேசன் தலைமையிலான காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது அங்கு மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்தவா்களை பிடித்து விசாரித்தனா்.
இதில், சின்னவளையம், சாலைத் தெருவைச் சோ்ந்த மணி மகன் ஆனஸ்ட்ராஜ் (27), கீழத்தெருவைச் சோ்ந்த பழனிமுருகன் மனைவி ரேவதி(32) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப்பதிந்து அவா்களை கைது செய்து, அவா்களிடமிருந்து 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
லாட்டரி விற்றவா் கைது: ஜெயங்கொண்டம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்றவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கடாரங்கொண்டான் கிராமத்தில் ஒருவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் உமாதேவி தலைமையிலான காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவுச் சென்றனா். அங்கு மேலத் தெருவைச்சோ்ந்த மாயவன் மகன் அசோகன் என்பவா் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரியவந்தது. இதயைடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...