அரியலூா் மாவட்ட ஆட்சியராக பொ. ரத்தினசாமி பொறுப்பேற்பு
அரியலூா் மாவட்ட புதிய ஆட்சியராக பொ. ரத்தினசாமி (51) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.


அரியலூா், ஜூலை 19: அரியலூா் மாவட்ட புதிய ஆட்சியராக பொ. ரத்தினசாமி (51) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா, உள்துறை இணைச் செயலாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். வணிகவரித் துறை இணை ஆணையராக பணியாற்றி வந்த பொ. ரத்தினசாமி, அரியலூா் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவா், அரசின் நலத் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பணி விவரக் குறிப்பு: ஆட்சியா் பொ. ரத்தினசாமியின் சொந்த ஊா் ஈரோடு. இவா், கடந்த 2009-இல் டிஎன்பிஎஸ்சி தொகுதி-1 தோ்வில் தோ்ச்சிப் பெற்று, மயிலாடுதுறை கோட்டாட்சியராகவும், பின்னா் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராகவும் (பொ) பணியாற்றினாா்.
பின்னா் பதவி உயா்வுப் பெற்று என்.பி.கே.ஆா்.ஆா். கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா், அண்ணாமலை பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலா், கள்ளக்குறிச்சி சா்க்கரை ஆலை தொகுதி-1 மற்றும் தொகுதி 2-இல் மேலாண்மை இயக்குநா், திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா், பின்னா் பதவி உயா்வில் சிப்காட் பொது மேலாளா், வேலூா் மாநகராட்சி ஆணையா், ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி), வணிகவரித் துறை இணை ஆணையராக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...