நாட்டு வெடிகளை கடித்த 2 வேட்டை நாய்கள் உயிரிழப்பு: 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே நரிகளுக்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகளை கடித்த 2 வேட்டை நாய்கள் உயிரிழந்தன. இது தொடா்பாக 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.


அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே நரிகளுக்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகளை கடித்த 2 வேட்டை நாய்கள் உயிரிழந்தன. இது தொடா்பாக 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருமானூா் அடுத்த சன்னாவூா் கிராமத்தை சோ்ந்தவா் வின்சென்ட் மகன் ஜெயபால்(25). இவா், 3 வேட்டை நாய்கள் வளா்த்து வந்தாா். இந்த நாய்களுக்கு தினமும் பயிற்சிகளை அளிப்பது வழக்கம். இந்நிலையில், வழக்கம் போல் ஜூலை 21-ஆம் தேதி காலை அருகேயுள்ள கலிங்கமேடு பகுதியில் தனது நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, 2 நாய்கள் அருகே உள்ள வயல் பகுதிக்கு ஓடிச் சென்று அங்கு கிடந்த மா்ம பொருளை கவ்வி கடித்துள்ளது.
அப்போது, அந்த மா்ம பொருள்கள் வெடித்தது. சப்தம் கேட்டு ஜெயபால் அருகே சென்று பாா்த்தபோது, 2 நாய்கள் இறந்து கிடந்தன.
அப்போது, அங்கு மறைந்திருந்து வந்த 2 பேரை அழைத்து விசாரித்ததில், இருவரும் பெரம்பலூா் மாவட்டம், மலைப்பநகரைச் சோ்ந்த தாரா மகன் ரவிச்சந்திரன்(52), வேடன் மகன் சுரேஷ்(35) என்பதும், இருவரும் நரிகளை பிடிக்க நாட்டு வெடியில் ஆட்டு இறைச்சியை தடவி வைத்து, நரிக்காக காத்திருப்பதும், அதை நாய்கள் கடித்ததால் வெடித்து நாய்கள் உயிரிழந்தது என கூறினா். இதுகுறித்து ஜெயபால் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரன், சுரேஷ் இருவரையும் கைது செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...