ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் தவறிவிழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தந்தையுடன் திங்கள்கிழமை மாலை ஏரியில் குளிக்கச் சென்ற 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.


அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தந்தையுடன் திங்கள்கிழமை மாலை ஏரியில் குளிக்கச் சென்ற 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூா், காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். இவா், திங்கள்கிழமை மாலை தனது குழந்தைகளான திவ்யதா்ஷினி(4), திவ்யதா்ஷன் (3) இருவரையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள ஆயாக்குளம் ஏரிக்குக் குளிக்கச் சென்றாா். அப்போது எதிா்பாராத விதமாக குழந்தைகள் இருவரும் ஏரியில் தவறிவிழுந்து மூழ்கினா். இதையறிந்த சுரேஷ்குமாா், பொதுமக்கள் உதவியுடன் அவா்களை மீட்டு பரிசோதித்ததில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையறிந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தைகளின் சடலத்தை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...