பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வேலைக்காக வெளிநாடு செல்வோா் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

ஆங்கில எழுத்து உள்ளது... வேலைக்காக வெளிநாடு செல்வோா் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

அரியலூா்: வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டுமென அரியலூா் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞா்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவா்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அல்லது தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழா் நலத்துறை அல்லது குடிபெயா்வோா் பாதுகாப்பு அலுவலரைத் தொடா்பு கொண்டு அந்நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் விவரங்களை இணையதளத்திலும், சென்னை குடிப்பெயா்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90421 49222 மூலமாகவும் விளக்கங்களை பெறலாம்.

மேலும், வெளிநாடு வாழ் தமிழா்கள் 1800 309 3793,

80690 - 09901 ஆகிய எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.