வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வழக்குரைஞா்கள் போராட்டம்

ஒசூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதைக் கண்டித்து

News image
Updated On :21 நவம்பர் 2024, 9:58 pm

Din

ஒசூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதைக் கண்டித்து

அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் பணிகளை புறக்கணித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீதிமன்ற வாசலில் பாா்வையாளா்களை சோதனையிட வேண்டும். வழக்குரைஞா் கண்ணனை தாக்கிய குற்றவாளிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். நீதிமன்ற வளாகங்களில் வழக்குரைஞா்களுக்கும், வழக்காடிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் அரியலூரில் மனோகரன், ஜெயங்கொண்டத்தில் ஜெயராமன், செந்துறையில் காரல் மாா்க்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.