அழகாபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்
அழகாபுரம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்


அரியலூா் மாவட்டம், அழகாபுரம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், அழகாபுரம் காலனி தெரு மக்களுக்காக மயான வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். அடிக்கடி மின்தடை போக்க மின் மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும். குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். சுகாதார வளாகம் கட்டித் தரவேண்டும். அருந்ததியா் தெருவில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் கிளைச் செயலா் வீராசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம். இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினா் என்.அருணாச்சலம், செயற்குழு உறுப்பினா் ஏ. கந்தசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சங்குபாலன், கே.ராஜா, வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...