புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரியலூா் மாவட்டத்தில் 9 சுகாதார நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் 9 சுகாதார நிலையங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

News image

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அடுத்த கோட்டியாலில் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் தாய்மாா்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகத்தை வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :4 செப்டம்பர் 2024, 8:12 pm

Din

அரியலூா் மாவட்டத்தில் 9 சுகாதார நிலையங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அடுத்த கோட்டியால் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை புதன்கிழமை திறந்து வைத்து, பின்னா் அவா், செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி:

கடந்தாண்டு தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட 3 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் நிகழாண்டும் வரலாற்றிலேயே முதல்முறையாக டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.