அரியலூா் அரசு கலைக் கல்லூரி முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா்.
அரியலூா் அரசு கலைக் கல்லூரி முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா்.

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.யுஜிசி வழிக்காட்டுதலின் படி ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயா்த்த வேண்டும்.பணி மூப்பு பட்டியலை வெளியிட வேண்டும். கெளரவ விரிவுரையாளா்களுக்கு மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மண்டலத் தலைவா் அ. சேட்டு, கிளைத் தலைவா் சா. ஜெயக்குமாா் மற்றும் கிளைச் செயலா் இரா. ஸ்டீபன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் அனைத்து கிளை பொறுப்பாளா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் பொருளாளா் வை .சிவக்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com