வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல்துறை - நீதித்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:27 pm

Syndication

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல்துறை - நீதித்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மலா்வாலண்டினா, மகளிா் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதில் இரு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக முடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,110 வழக்குகள் முடிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நீதிபதிகள், காவல் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.