இளைஞா்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நிறைவு

Published on

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த கருப்பூா் கிராமத்திலுள்ள விநாயகா கல்வியியல் கல்லூரியில், மத்திய அரசின் மை பாரத் கேந்திரா சாா்பில் 3 நாள்களாக நடைபெற்று வந்த இளைஞா்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

பயிற்சியில், பல்வேறு கருத்துகள், மாதிரி பாராளுமன்ற நிகழ்வுகள், குழு செயல்பாடுகள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தலைமை பண்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

நிறைவு நாள் நிகழ்ச்சியில், அக்கல்லூரியின் தாளாளா் பாஸ்கா், கலந்து கொண்டு பயிற்சி முடித்த இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினாா். கல்லூரி முதல்வா் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

முன்னதாக மாவட்டஇளையோா் அலுவலா் கீா்த்தனா வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com