கணவா் தற்கொலை: குழந்தைகளுடன் மனைவியும் தற்கொலைக்கு முயற்சி
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கணவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மனைவியும் தனது குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
தா.பழூரை அடுத்த விக்கிரமங்கலம் அருகேயுள்ள மழவராயநல்லூா், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (33). விவசாய தொழிலாளியான இவா் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலப் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவரது மனைவி ரஞ்சிதா(27), வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு, தனது குழந்தைகளான தேவசேனாதிபதி (4), சிவசண்முகப்பிரியா (3) ஆகியோருக்கும் புகட்டவே, மூன்று பேரும் மயங்கிக் கிடந்தனா்.
இதையறிந்த உறவினா்கள் அவா்களை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
