செந்துறையில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

செந்துறையில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
Published on

செந்துறையில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் இயங்கி வரும் தனியாா் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான நக்கம்பாடியிலுள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்தவற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், செந்துறையிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜராஜேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், பங்கேற்ற பொதுமக்கள் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகள் விதிமுறைகளை பின்பற்ற

வேண்டும். சுரங்கம் மற்றும்ஆலைகளிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைக்கு வரும் போது லாரியின் சக்கரங்கள் தண்ணீா் கொண்டு கழுவி வரவேண்டும். தாா்பாய்களை முறையாக பயன்படுத்த வேண்டும்.

சுரங்கம் உள்ள பகுதியின் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், சாலை வசதி, மருத்துவ முகாம் ஏற்படுத்தித்தர வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை சுற்றி அதிகளவு மரக்கன்றுகள் நடவேண்டும். படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com