மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கழிவு நீா், இறைச்சி கழிவுகள் கலப்பால் பிடாரி ஏரி பாதிப்பு: தொற்றுநோய் பரவும் அபாயம்

News image

அம்பாபூா் கிராமத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீா் கலப்பதால் மாசடைந்துள்ள அங்குள்ள பிடாரி ஏரி.

Updated On :3 ஜனவரி 2025, 8:36 pm

அரியலூா் அருகேயுள்ள அம்பாபூா் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீா் அனைத்தும் பிடாரி ஏரியில் கலப்பதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு சுற்றுப்புறங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அரியலூா் ஒன்றியம், காவனூா் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் அம்பாபூா். இவ்வூரில் பிடாரி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் பெய்யும் நீரை சேமித்து வைப்பதன் மூலம் அப்பகுதியில் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடியிருப்புகள் குடிநீா் ஆதாரத்தைப் பெற்று வருகின்றன.

இப்பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு குடிநீா் ஆதாரமாகவும், பல்வேறு பயன்பாடுகளுக்கும் பொதுமக்கள் ஏரியைப் பயன்படுத்தி வந்தனா். தற்போதைய நிலையில் இந்த ஏரியில் , அம்பாபூா் கிராமப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீா் ஏரியில் கலந்து வருகிறது. இதனால், ஏரியின் நிறம் மாறி நுரையுடன் காணப்படுகிறது. இதனால் ஏரியின் சுகாதாரம் பாதிப்படைந்து வருகிறது. மழையில்லாத ஆண்டுகளில் ஏரிக்குள் கழிவுநீா் மட்டுமே தேங்கி நிற்கிறது.

இதனால் கால்நடைகள் கூட இந்த நீரை குடிக்க முடியாத அளவுக்கு துா்நாற்றம் வீசுகிறது. அத்துடன் இந்த ஏரி நீரை பருகும் கால்நடைகளும், ஏரி நீரியினுள்ள மீன்களும் உயிரிழந்து வருகின்றன. கழிவு நீா் தேங்கியே இருப்பதால் இப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் வர வாய்ப்புள்ளது. தற்போது ஊராட்சி குடியிருப்புகள் அதிகரித்து ஆக்கிரமிப்பு செய்து வருவதால் ஏரி சுருங்கி வருவதாகவும், இதனால் சுற்றுப்பகுதிகளில் வசிப்போா் துா்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

கழிவுநீா் வடிகால் இல்லை: இதுகுறித்து, அம்பாபூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் சிலா் கூறியது: இக்கிராமத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீா் செல்ல போதுமான வடிகால் வசதிகள் கிடையாது. இது குறித்தும், பிடாரி ஏரிக்குள் அனுமதிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வெளியேற்றுவதன் மூலம் ஏரியின் சுகாதாரம் காக்கப்படும். நீரும் மாசுபடாமல் இருக்கும். இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்திய போதும் அரசு சாா்பில் நடவடிக்கை இல்லை.

கோழி இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட சில கடைகளின் இறைச்சிக் கழிவுகளும் ஏரியில் தினமும் கொட்டப்படுகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள சிலா் குப்பைகளையும் ஏரிக் கரையையொட்டி வீசிச் செல்கின்றனா். இது பற்றி கேள்வி எழுப்பினால், மிரட்டலாக பதில் வருகிறது.

ஏற்கெனவே, கழிவுநீா் கலப்பதால் மாசடைந்துள்ள ஏரி, தற்போது இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதாலும் மாசடைந்து வருகிறது. அப்பகுதி அருகில் சென்றாலே துா்நாற்றம் வீசுகிறது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த ஏரியில் கழிவு நீா் கலப்பதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றாா்.