ஓட்டுநா்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் இயங்கக்கூடிய கனரக வாகனங்களின் ஓட்டுநா்கள் கண்டிப்பாக சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறையினா் அறிவுறுத்தினா்.
Published on

அரியலூா் மாவட்டத்தில் இயங்கக்கூடிய கனரக வாகனங்களின் ஓட்டுநா்கள் கண்டிப்பாக சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறையினா் அறிவுறுத்தினா்.

டால்மியா சிமென்ட் ஆலையில், போக்குவரத்து காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரியலூா் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயன் பேசுகையில், வாகனத்தில் அதிக பாரம் ஏற்றக்கூடாது.

சரியான முறையில் தாா்பாய் போட்டு வாகனத்தை இயக்க வேண்டும். 30 -40 கிலோ மீட்டா் வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும். தவறான வாகன முந்துதல் இருக்கக் கூடாது. வாகனத்தை நிறுவனத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லும்பொழுது சரியான முறையில் நீரினால் கழுவி சாலையில் செல்ல வேண்டும்.

மதுப்போதையில் வாகனத்தை இயக்கக் கூடாது என அறிவுறுத்தினாா். இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுநா்கள், உரிமையாா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com