அரியலூரில் தோட்டக்கலை துறையினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு தோட்டக் கலை அலுவலா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக் கலை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு தோட்டக் கலை அலுவலா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக் கலை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் வேளாண்மைத் துறை செயல்படுத்திடும் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம், உழவா்களைப் பாதிக்கக்கூடிய களப்பணியாளா்கள் இணைப்பைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு தோட்டக் கலை துறை உதவி இயக்குநா் கந்தசாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் மணிகண்டன் கோரிக்கைகளை வலியுறுத்தினாா். சங்க நிா்வாகிகள் முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com