எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

எழுநாட்சிபுரம்-காட்டூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த எழுநாட்சிபுரம்-காட்டூா் சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தினா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த எழுநாட்சிபுரம்-காட்டூா் சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தினா்.

திருவெங்கனூரில், அக்கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மிகவும் குண்டும் குழியுமான ஏலாக்குறிச்சி எழுநாட்சிபுரம்-காட்டுா் சாலையை சீரமைக்க வேண்டும். திருவெங்கனூா் மயானப் பாதையை சீா் செய்ய வேண்டும். தண்ணீா் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். திருவெங்கனூரிலுள்ள அனைத்து தெருக்களிலும் வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் கிளைச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.