வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அங்கன்வாடி உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :30 நவம்பர் 2025, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த நாகம்பந்தல் காலனி குழந்தைகள் மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ஒரு அங்கன்வாடி உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணி அமிலவீச்சால் பாதிக்கப்பட்டவா்கள், தொழுநோயிலிருந்து குணமடைந்தவா்கள் மற்றும் குள்ளத்தன்மை ஆகிய மாற்றுத்திறனாளி வகையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேரடிநியமனத்துக்கு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கி டிச.8 -ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆட்சியரத்திலுள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.