மருத்துவம், கல்வி, தண்ணீரை எனது அரசு இலவசமாகத் தரும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான்.
அரியலூா் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புகழேந்திக்கு வாக்குகேட்டு, அரியலூா் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு மழையில் நனைந்தபடி பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது: வாக்குக்கு காசு, மக்களுக்கு இலவசத்தைக் கொடுத்து கெடுத்து வைத்துள்ளனா். இலவசங்கள் பெறுவதைக் கைவிடுங்கள். நான் படித்தவா்கள், படிக்காதவா்கள் என அனைவருக்கும் அரசு வேலை வழங்குவேன். பனை, தென்னை, ஆடு என அனைத்துக்கும் அரசு வேலை இருக்கு. அறிவாா்ந்த நாடாக தமிழகத்தை மாற்றுவேன். உங்கள் பிள்ளைகளுக்கு கட்டணமில்லா கல்வியை ஏற்படுத்தித் தருவேன். உலகத் தரத்துக்கு கல்வியைக் கொண்டு செல்வேன். அனைவரும் அரசுப் பள்ளியில் படிக்க சட்டம் கொண்டுவருவேன். தாய்மொழி தமிழையும், மாற்று மொழி ஆங்கிலத்தையும் கற்க உரிய வழிவகை செய்வேன். மருத்துவம், கல்வி, தண்ணீரை எனது அரசு இலவசமாகத் தரும். ஊழலற்ற அரசை தருவேன். எனவே, எங்களது வேட்பாளா்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.
சீமான் பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் மழை பெய்யத்தொடங்கி பொதுக்கூட்டம் முடியும் வரை மழை பெய்தது. இருப்பினும், மழையில் நனைந்தபடி பிரசாரத்தை மேற்கொண்டாா்.
தொடர்புடையது

மாற்றத்துக்கான புரட்சி தேவை: சீமான்

தமிழகத்தில் ஆட்சி மாறுகிறது; ஆட்சி முறை மாறவில்லை: சீமான்
தோல்வியைக் கண்டு அச்சமில்லை: சீமான்

சத்தியமங்கலத்தில் சீமான் பிரசாரம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


